குடும்பம்தான் முக்கியம்; ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் - ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேச்சு

குடும்பம்தான் முக்கியம்; ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் - ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேச்சு
குடும்பம்தான் முக்கியம்; ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் - ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேச்சு

குடும்பம்தான் முக்கியம் என்றும், ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் எனவும் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களை நேற்று முதல் சந்தித்து வருகிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, வரும் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தனது அரசியல் நிலைப்பாடு பற்றி வரும் 31ஆம் தேதி அறிவிப்பேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தெரிவித்திருந்தார்.

இதனிடயே இரண்டாவது நாளாக இன்று நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ரஜினிகாந்த், ராகவேந்திரா மண்டபத்திற்கு கிளம்பியபோது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தனது முடிவினை அறிந்து கொள்ள நான்கு நாள்கள் காத்திருங்கள் என்று தெரிவித்தார்.

பின்னர் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; உங்களுக்கு குடும்பம்தான் முக்கியம். ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். உங்களை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார். தொடர்ந்து ரசிகர்களுடன் போட்டோ எடுக்கம் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com