வீடு புகுந்து கத்திமுனையில் 32 சவரன் கொள்ளை

வீடு புகுந்து கத்திமுனையில் 32 சவரன் கொள்ளை
வீடு புகுந்து கத்திமுனையில் 32 சவரன் கொள்ளை

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கத்திமுனையில் நகை, பணத்தை கொள்ளை‌யடித்துச் சென்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து குன்னத்தூரில் கேபிள் டிவி நடத்தி வருபவர் சந்திரன், இவரது மனைவி சித்ராதேவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டதால், சந்திரன் தனது மனைவியுடன் குன்னத்தூரில் செங்கம்பள்ளி சாலையில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வருகின்றார்.

இன்று அதிகாலை சந்திரன் வீட்டு பின் பக்க கதவை உடைத்துக் கொண்டு பார்த்தால் அடையாளம் சொல்லக் கூடிய வகையில் மூன்று பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 32 -சவரன் தங்க நகைகள் மற்றும் 50000 ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து தகவல் அறிந்த குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com