
வாடகை செலுத்தாவிட்டால் லதா ரஜினிகாந்தின் கடையை காவல்துறையினர் உதவியுடன் காலி செய்யலாம் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடையில், கடந்த 25 ஆண்டுகளாக லதா ரஜினிகாந்த், ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்தக் கடைக்கு மாத வாடகையாக 3,700 ரூபாய் லதா ரஜினிகாந்த் செலுத்தி வந்த நிலையில், கடையின் வாடகைத் தொகையை 21,160 ரூபாயாக மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தியது. அதை எதிர்த்து லதா ரஜினி தரப்பில் தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், மாநகராட்சி வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறையினர் உதவியுடன் கடையை காலி செய்யலாம் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.