Published : 28,Dec 2017 10:14 AM

ஜெ.நினைவுநாளில் இருந்து சசிகலா மௌன விரதம்: தினகரன்

Sasikala-in-Fast-after-Jayalalitha--Memorial-Day-Dhinakaran

ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சசிகலா மவுன விரோதம் இருந்து வருகிறார் என்று சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் இன்று சந்தித்தார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சசிகலாவிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தினகரன் பேசும் போது, “ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சசிகலா மவுன விரதம் இருந்து வருகிறார். ஜனவரி இறுதி வரை இந்த மவுன விரதம் தொடரும். எதிர்க்காலத்தில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து அவரிடம் தெரிவித்தேன். அவர் கேட்டுக் கொண்டார். கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டுமென்றால், துரோகம் செய்தது பன்னீர் செல்வம் தரப்பினரைதான் நீக்க வேண்டும். நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு. மக்களாலும், தொண்டர்களாலும் ஆட்சியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டார்கள். 

ஜெயலலிதா சிகிச்சையில் எவ்வித மர்மமும் இல்லை. திட்டமிட்டு சசிகலாவுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. திமுகதான் இந்தப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது. சசிகலா படத்தை கிழித்தார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்துள்ளோம். ஜெயலலிதாவின் வாரிசான சசிகலா தலைமையிலான ஆட்சி நடைபெறவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இந்த ஆட்சி கவிழ வேண்டும் என்று கூறி தான் வாக்கு கேட்டோம். ஜெயக்குமார் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அமைச்சர் ஜெயக்குமாரின் சொந்த தொகுதியிலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன்” என்றார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்