தனுஷ் எங்கள் மகன்தான் என்று ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும்: கதிரேசன் தம்பதி

தனுஷ் எங்கள் மகன்தான் என்று ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும்: கதிரேசன் தம்பதி
தனுஷ் எங்கள் மகன்தான் என்று ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும்: கதிரேசன் தம்பதி

நடிகர் தனுஷை தங்களது மகன் என கூறிவரும் மேலூர் கதிரேசன் தம்பதி நடிகர் ரஜினிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். பெற்றோராகிய தங்களை பார்க்க தனுஷை அனுப்பும்படி அவர்கள் ரஜினிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன் - மீனாட்சி தம்பதி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மகன் என தொடர்ச்சியாக உரிமை கோரி வருகின்றனர். மேலும், தனுஷ் தங்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்நிலையில், கதிரேசன் - மீனாட்சி தம்பதி, தனுஷ் மாமனாரான ரஜினிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய அவர்கள், “நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான் என்பது ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும். பெற்றோரான எங்களை கவனித்துக்கொள்ள தனுஷ்க்கு ரஜினி அறிவுரை வழங்கி தனுஷை அனுப்பி வைக்க வேண்டும்” என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com