Published : 28,Dec 2017 04:33 AM

பாண்ட்யா போன்ற வீரர்கள்தான் தேவை: ராகுல் டிராவிட்!

Hardik-Pandya-has-X-factor--Rahul-Dravid

ஹர்திக் பாண்ட்யா போன்ற ஆல் ரவுண்டர்கள்தான் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சுடன் கூடிய ஆல்-ரவுண்டர்கள் குறைவு. சுழற்பந்து வீச்சுடன் கூடிய பேட்ஸ்மேன்கள்தான் அதிகம். ஹர்திக் பாண்ட்யா வேகப்பந்துவீச்சுடன் கூடிய ஆல் ரவுண்டராக இருப்பதால் அவருக்குப் போட்டி இல்லை. இவரைப் போல வேறு யார் இருக்கிறார்கள் என்று தேடினால் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அதோடு பாண்ட்யா தன்னை நிரூபித்து வருகிறார். இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்கி தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். இதுபோன்ற வீரர்களை தேர்வு செய்துள்ள தேர்வுக்குழுவை பாராட்ட வேண்டும். தமிழக வீரர் விஜய் சங்கர், ஸ்டூவர்ட் பின்னி போன்றோரும் வேகப்பந்துவீச்சுடன் கூடிய ஆல் ரவுண்டர்களாக இருக்கிறார்கள்’ என்றார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்