Published : 28,Dec 2017 02:44 AM

ஷிகர் தவான் காயம்: முதல் டெஸ்ட்டில் ஆடுவது சந்தேகம்!

Injury-scare-for-Sikhar-Dhawan

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்துள்ளதை அடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவர் களமிறங்க மாட்டார் என்று கூறப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட், ஆறு ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில்
விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு நேற்று புறப்பட்டது. இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர் தவானுக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பாக, அவர் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக்குடன் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. 
‘தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இப்போது அணியினருடன் அவர் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவரா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தவான் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. இதையடுத்து கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்