Published : 27,Dec 2017 11:49 AM
அரசுப் பேருந்தில் சென்ற மாவட்ட ஆட்சியர்

மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி கிராமத்தில் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்டார். பைந்தாம்பாடியில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆட்சியர், துணை ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் அரசுப் பேருந்தில் பயணம் சென்றனர். பைந்தாம்பாடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் 750 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதிகாரிகள் எளிமையாக அரசுப் பேருந்துகளில் பயணிப்பது மகிழ்சியளிப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.