நடிகர் தவக்களை காலமானார்

நடிகர் தவக்களை காலமானார்
நடிகர் தவக்களை காலமானார்

முந்தானை முடிச்சு படம் மூலம் காமெடி நடிகரான அறிமுகமாக நடிகர் தவக்களை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 42.

ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் கே.பாக்கியராஜின் இயக்கி, கடந்த1983 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ’முந்தானை முடிச்சு’. இந்த படத்தில் நடிகை ஊர்வசியுடன் ரகளை செய்யும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகர் தவக்களை. உயரம் குறைவாக இருந்தாலும், இவரது வசன உச்சரிப்பும், குரலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. முந்தானை முடிச்சு படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘தவக்களை’. பின்னாளில் அதுவே அவரின் பெயராக நிலைத்துவிட்டது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சென்னை வடபழனியில் வசித்து வந்த அவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com