Published : 27,Dec 2017 06:33 AM
இமாச்சல் முதல்வராக பதவியேற்றார் ஜெய்ராம் தாக்கூர்

இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இமாச்சலப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அங்குள்ள 66 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் பதவிக்கு ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.