[X] Close

1996ல் திமுகவின் பிரசாரத்திற்கு உதவிய ரஜினியின் கருத்து: வைகோ பேட்டி

Vaiko-interview-about-rajinikanth-political-life

1996-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் கூறிய கருத்து அப்போது திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதனால்தான் 1996-ல் இருந்தே அரசியலுக்கு வந்துவிட்டதாக ரஜினி கூறியதாகவும் வைகோ தெரிவித்தார்.


Advertisement

நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களை நேற்று முதல் சந்தித்து வருகிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, வரும் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தனது அரசியல் நிலைப்பாடு பற்றி வரும் 31ஆம் தேதி அறிவிப்பேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தெரிவித்திருந்தார். “அரசியலுக்கு நான் புதிது இல்லை. 1996-ல் இருந்தே அரசியலுக்கு நான் வந்து இருப்பதால் அதில் என்ன கஷ்ட நஷ்டங்கள் இருக்கிறது..? அதில் இருக்கும் ஆழம் என்ன? என்பதையெல்லாம் தெரிந்து இருக்கிறேன்” என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் கூறிய கருத்து அப்போது திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “இப்போதைய ஆட்சி தொடர்ந்தால், ஆண்டவனே காப்பாற்ற முடியாது என 1996-ல் ரஜினி கருத்து தெரிவித்திருந்தார். இது முழுமையாக திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரத்திற்கு பெரிதும் பயன்பட்டது. அதனை மனதில் வைத்து கொண்டுதான் 1996-ல் இருந்தே அரசயலில் இருக்கிறேன் என ரஜினி கூறியிருக்கிறார். 31-ஆம் தேதி ரஜினி என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close