[X] Close

சர்ச்சை வார்த்தைக்கு ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

Auditor-S-Gurumurthy----give-explaination-to-his-controversy-word

ஓபிஎஸ்-ஈபிஎஸ் குறித்த தன்னுடைய விமர்சனம் சர்ச்சையானது தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குருமூர்த்தி, தினகரன் ஆதரவாளர்கள் மீது காலங்கடந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை எனத் தெரிவித்து இருந்தார். இருவரையும் impotent என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அவர் விமர்சித்திருந்தார்.

ஆடிட்டர் குருமூர்த்தியின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். குருமூர்த்திக்கு நாவடக்கமும், நிதானமும் தேவை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். ஒவ்வொரு அதிமுக தொண்டரும் ஆண்மையுடனும், காங்கேயம் காளையை போலவும் இயக்கத்தை கட்டிக்காத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார்.


Advertisement

        

விமர்சனங்கள் எழுந்த நிலையில் ‘தான் முக்கியமான ஒரு சட்ட ஆலோசனையில் இருப்பதால் அமைச்சருக்கு முழுவதுமாக பதிலளிக்க முடியவில்லை. கொஞ்சம் பொருக்கவும். என்னுடைய முழு பதிலையும் கொடுக்கிறேன். காத்திருக்கவும்’ என்று குருமூர்த்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சர்சையான தனது பேச்சுக்கு குருமூர்த்தில் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். “நான் ட்விட்டரில் கூறிய impotent என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.அதிமுக அரசு என் மேல் நடவடிக்கை எடுப்பதை நான் வரவேற்கிறேன். எவ்வளவோ அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை நான் பார்திருக்கிறேன். இந்த நடவடிக்கையையும் சந்திப்பேன்.


Advertisement

முதலில் Potential என்றால்  ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையானது impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது.  நான் Twitter எழுதியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி ட்விட்டரில் போட முடியாது.

இரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனற்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.

நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பேச்சில் நான் ஈடுபட்டால் தான் அவர் கூறிய பட்டதுக்கு நான்  ஏற்றவனாவேன். நான் சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தவன். இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே அதிமுக அமைச்சர் மட்டுமே impotent என்கிற வார்த்தையை ஆண்-பெண் சம்பந்தப்படுத்தி அர்த்தம் கொடுக்கிறார். அதற்கு நான் பொறுப்பல்ல. இத்துடன் நான் கூறியதில் எந்தத் தவறோ கண்ணிய குறைவோ கிடையாது என்று கூறி முடிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close