[X] Close

இலங்கை வீரர்களுக்கு பயிற்சியாளராக மாறிய தோனி: வைரலாகும் வீடியோ

Watch-MS-Dhonis-Masterclass-For-Sri-Lanka-Players-After-Series-Loss

இலங்கை வீரர்களுக்கு தோனி பேட்டிங் ஆலோசனை கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்து இந்திய இலங்கை வீரர்கள் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

            


Advertisement

இதில் தோனி இலங்கை வீரர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இலங்கை வீரர்கள் தரங்கா, தனஞ்ஜெயா மற்றும் சமரவிக்ரமா ஆகியோரிடம் தோனி பேசிக்கொண்டிருக்கிறார். தோனி பேட்டிங் குறித்து கைகளை அசைத்து ஆலோசனை வழங்குகிறார். இலங்கை வீரர்கள் தோனியின் பேச்சினை கூர்ந்து கவனிக்கிறார்கள். 

இலங்கை அணியின் கேப்டன் பெரேரா சஞ்சய் மஞ்சரேகரிடம் பேசிக் கொண்டிருக்கையில், இலங்கை வீரர்கள் தோனியின் பேட்டிங் டிப்ஸை ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக கோலோச்சியாக தோனி, தனது பேட்டிங், கீப்பிங் மற்றும் அல்லாமல் பொறுமை உள்ளிட்ட அவரது பண்புகளால் மாற்று அணியினரால் கவரப்பட்டுள்ளார்.

         

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close