Published : 26,Dec 2017 11:37 AM

திமுக ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும்: ஸ்டாலின் உறுதி

Stalin-statement-for-RK-Nagar-Loss-and-TN-Govt

ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் சக்தி திமுகவுக்கு மட்டுமே உண்டு என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். இதில் அதிமுக இரண்டாம் இடத்தை பிடித்தது. திமுக மூன்றாம் இடத்தை பிடித்ததுடன், டெபாசிட்டை இழந்தது. இந்தத் தோல்வி திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று பல அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் களத்தில் வெற்றியை விருதாகவும், தோல்வி அடைந்தால் ஜனநாயக போர்க்களத்தில் பெற்ற விழுப்புண்ணாகவும் ‌கருதும் பக்குவத்தை திமுக பெற்றிருக்கிறது என தெரிவித்துள்ளார். அத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக மீது அவதூறு பரப்புவோர் ஏமாறுவது நிச்சயம் என்றும், ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் சக்தி திமுகவுக்கு மட்டுமே உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றிக்கு திமுக உதவியாக கூறப்படுவதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்