[X] Close

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டான ரஜினிகாந்த்!

-Rajainkanth-and--RajiniMeetFans-was-India-Level-Trending-in-Twitter

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், ட்விட்டரின் ‘#Rajinikanth’ ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.


Advertisement

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இன்று முதல் தனது ரசிகர்களை சந்தித்துள்ள ரஜினிகாந்த், வரும் 31ஆம் தேதி வரை புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். அதன்படி 18 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை இன்று முதல் 6 நாட்களுக்கு சந்திக்கிறார். முதல் நாளான இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 874 ரசிகர்கள், ரஜினியுடன் புகைப்படம் எடுத்தனர். 

இந்நிகழ்ச்சியில் இன்று பேசிய அவர், அரசியலுக்கு ‌தான் புதிதல்ல என்று கூறினார். களத்தில் வெற்றி பெறுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், வெற்றிக்கு வீரம் மட்டுமன்றி வியூகமும் அவசியம் என தெரிவித்தார். அரசியலின் ஆழம் பற்றி அறிந்து வைத்திருப்பதால்தான் அதனுள் வர தயங்குகிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் போர் என்றால் தேர்தல்தான் என்றும், அரசியல் குறித்த தனது முடிவை வரும் 31ஆம் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில்  ‘#Rajinikanth’ ‘ #RajiniFansMeet’ ஆகியவை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close