[X] Close

ஆர்.கே.நகரில் விஸ்வரூபம் எடுக்கும் 20 ரூபாய் டோக்கன்

20-rupees-token-Issue-Highlighted-in-RKNagar

சென்னை ஆர்.கே.நகரில் டோக்கனுக்கு பணம் வழங்கவில்லை என கூறி மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகரில் உள்ள மீனாம்பாள் நகரில் 20 ரூபாய் நோட்டுகளை இடைத்தேர்தலுக்கு முன்னதாக சிலர் டோக்கனாக கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் டோக்கன் வழங்கியதாக கூறப்படும் 6 பேரை பிடித்து அப்பகுதி மக்கள் பணம் வழங்ககோரி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கு விரைந்த தண்டையார்பேட்டை காவல்துறையினர் 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் தாக்குதலுக்கு ஆளான கார்த்திகேயன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close