நாமக்கல் பேருந்து நிலையத்தில் 6 மாத ஆண் குழந்தையை விட்டுச் சென்ற இளம்பெண், 4 மணி நேரத்திற்கு பின்னர் காவல்துறையிடம் இருந்து மீண்டும் குழந்தையை பெற்றுக்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் ஜம்புமடை பகுதியை சேர்ந்த பார்வதி, சித்ரா ஆகிய இருவரும் நாமக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது 6 மாத கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண், கழிவறை சென்று வரும் வரை தனது குழந்தையை பார்த்துக்கொள்ளக்கூறி பார்வதியிடம் கொடுத்துள்ளார். குழந்தையை கொடுத்து சென்ற பெண் வெகு நேரமாகியும் வராததால், அப்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்பெண் காணாமல் போனதை அடுத்து, இருவரும் நாமக்கல் காவல் நிலையத்திற்கு சென்று அந்த கைக்குழந்தையை ஒப்படைத்தனர்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குழந்தையை விட்டு சென்ற பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு, குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் குழந்தையை விட்டுச்சென்ற பெண் நான்கு மணி நேரத்திற்கு பிறகு காவல்துறையிடம் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளார். குழந்தையை விட்டுச்சென்ற பெண் மேட்டூர் பகுதியை சேர்ந்த தீபா என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!