[X] Close

இடைத்தேர்தல் தோல்வி அதிர்ச்சியளிக்கிறது: திருநாவுக்கரசர்

The-by-election-defeat-is-shocking--Thirunavukkarsar

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்தித்து இருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். கூட்டணி கட்சியில் உள்ள அனைவரும் ஆர்.கே.நகரில் வாக்குகள் குறைந்தது ஏன் என சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதாக கூறினார். மக்கள் பாஜகவை துடைத்து எறிந்து இருக்கிறார்கள்‌‌ என்பது தேர்தல் முடிவுகளில் தெரிவதாகவும் அவர் கூறினார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close