Published : 25,Dec 2017 07:49 AM

ஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி: அதிமுக உயர்மட்டக்குழு ஆலோசனை

admk-meeting-in-Royapettah

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, அதிமுக உயர்மட்டக்குழு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியிடம் இருந்தும், தமிழகத்தின் ஆளுங்கட்சியாக அதிமுக இருந்தபோதிலும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்ற நிலையில், மதுசூதனன் 48,306 வாக்குகளையே பெற்றார். இதனால் ஓபிஎஸ், ஈபிஸ் ஓரங்கட்டிய டிடிவி தினகரனுக்குதான் அதிமுகவின் அடுத்த தலைமை பதவி பொருந்தும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதனால் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்