[X] Close

ஆர்.கே.நகரில் நோட்டாவிடம் தோல்வி: தமிழக பாஜகவின் பரிதாப நிலை!

BJP-Party-Status-in-Tamilnadu

தமிழக அரசியலில் பாஜக செல்ல வேண்டிய தூரம் தூரம் வெகு தொலைவில் உள்ளது என்பது அக்கட்சிக்கு கிடைத்துவரும் வாக்கு சதவிகிதம் உணர்த்துகிறது.

நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு பெருகி வருவதாக பாரதிய ஜனதா கூறிக் கொள்கின்ற போதிலும், தமிழகத்தில் அக்கட்சி காலூன்றுவது கானல் நீராகவே உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள், தமிழகத்தில் அக்கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

பாரதிய ஜனதா கட்சி தமிழக சட்டப்பேரவையில் 1996 ஆம் ஆண்டு கால் பதித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் வேலாயுதம் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2001 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அக்கட்சிக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. அதில் காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜா, மயிலாடுதுறையில் ஜெகவீரபாண்டியன், தளியில் கே.வி.முரளிதரன், மயிலாப்பூரில் கே.என்.லட்சுமணன் ஆகியோர் அப்போது வெற்றி பெற்றனர். அதன்பின்னர் நடைபெற்ற எந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாரதிய ஜனதா சார்பில் யாரும் வெற்றி பெற்றதில்லை.


Advertisement

கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில் அக்கட்சிக்கு மொத்தம் 12 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அதாவது பதிவான வாக்குகளில் 2.86 சதவிகித வாக்குகள் மட்டுமே பாரதிய ஜனதாவுக்கு கிடைத்தது. ஆறு தொகுதிகள் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் அக்கட்சி டெபாசிட் இழந்தது. விருகம்பாக்கம் தொகுதியில் நின்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 19,167 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

சுமார் 20 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் இருந்துவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கிடைத்திருக்கும் வாக்குகள் நோட்டாவை விடக் குறைவாகும். தமிழகத்தைப் பொருத்தவரை தேர்தல் அரசியலில் பாரதிய ஜனதா செல்ல வேண்டிய தூரம் வெகுதொலைவில் உள்ளது என்பதை அக்கட்சிக்கு கிடைத்துவரும் வாக்கு சதவிகிதம் உணர்த்துகிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close