[X] Close

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கமல் எதிர்ப்புக் குரல்

Kamal-Opposes-Hydro-Carbon-Project

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.

சமீபகாலங்களில் தமிழக அரசியல்சூழல் குறித்தும், பல்வேறு பிரச்னைகள் குறித்தும் சமூக வலைதளம் மூலமாக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து வருகிறார். இன்றைய சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும்’ என்று பதிவிட்டுள்ளார். மற்றோரு பதிவில், எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வெற்றியும், இயற்கையை அழிப்பது மற்றும் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதில் இருந்துமே தொடங்குகிறது. தமிழக மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை எடுத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கமல் ட்விட்டரில் பாராட்டும் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள கமல், அமைதியைக் கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close