
ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றித்தரப்படும் என எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டிடிவி தினகரன், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற சென்னை ராணி மேரி கல்லூரிக்குச் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயரிடம் அதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார். டிடிவி தினகரனின் வருகையை ஒட்டி அவரது ஆதரவாளர்கள் அங்கு உற்சாக வரவேற்பளித்தனர். பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர்.
அதன் பின்னர் வீட்டிற்குச் செல்லும் போதும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தாண்டு பிறந்த பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதாவின் வாரிசு தாங்கள்தான் என்பதை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டார்.