ஸ்டாலின் கருத்துக்கு பன்னீர்செல்வம் கண்டனம்

ஸ்டாலின் கருத்துக்கு பன்னீர்செல்வம் கண்டனம்

ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவை தமிழக மக்களின் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்றும் அவரைபற்றி காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிர்ஷடவசமானது என பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதாவை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்கு பயனுள்ள வேலையை செய்ய வேண்டும். அரசியல் நாகரீகம் இல்லாமல் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com