Published : 24,Dec 2017 01:41 AM

பிரதமரின் குஜராத் வளர்ச்சி மாதிரியை மக்கள் நிராகரித்துவிட்டனர்: ராகுல்காந்தி

Congress-President-Rahul-Gandhi-while-addressing-party-workers-in-Ahmedabad

பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியை மக்கள் நிராகரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர் பாரதிய ஜனதாவினரால் காங்கிரஸ் கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியவில்லை என தெரிவித்தார். குஜராத் வளர்ச்சி குறித்து பேச முடியாததால் பிரதமர் தம்மைப் பற்றியே பேசிக்கொண்டதாக ராகுல் குறிப்பிட்டார். கட்சியில் சரியாக பணியாற்றாத 5 முதல் 10 சதவீதத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முழு மூச்சாக உழைத்தவர்களுக்கு உரிய பரிசு கிடைக்கும் என்றும் ராகுல் தெரிவித்தார். இந்த ஆலோசனையின் போது காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு நிர்வாகிகள் பல்வேறு காரணங்களை முன்வைத்ததாக தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்