[X] Close

பூட்டை உடைத்து 73 சவரன் நகைகள் கொள்ளை

Tirupur-Jewellery-Theft

திருப்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 73 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

திருப்பூர் மாவட்டம் சோளிபாளையம் பகுதியில் வசித்து வருபவர், ராஜேஷ்கண்ணன் . நேற்று முன் தினம் குடும்பத்துடன் அவர் கேரளா சென்றிருக்கிறார். இந்நிலையில், நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற முகமூடி கொள்ளையர்கள் இரண்டு பேர் பீரோவிலிருந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றிருக்கின்றனர். அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளை சம்பவம் பற்றி ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, வீடு திரும்பிய அவர், 73 சவரன் நகைகள் கொள்ளைபோயிருப்பதாகத் தெரிவித்தார்.
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close