[X] Close

ரீ எண்டரி கொடுக்கும் நோக்கியா.. விலை ரூ.4000?

Nokia-3310-Reboot-Price--Design-Leaked-Ahead-of-MWC-2017-Launch

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தையில் ரீ எண்டரி கொடுக்கும் நோக்கியா நிறுவனம், அதன் பழைய மாடலான 3310 எனும் மாடலை திருத்தி அமைத்து மீண்டும் வெளியிடவுள்ளது.


Advertisement

புதிய நோக்கியா மொபைல் போன்கள் நாளை மாலை பார்சிலோனாவில் நடைபெறவுள்ள விழாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. நோக்கியாவின் பிரபல மாடலான 3310 தற்போது 3310 ரீபூட் எனும் பெயரில் வெளிவரவுள்ளது. பழைய 3310வில் இருந்த சினேக் கேம் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. புதிய அப்டேட்டில் இந்த கேம் இருக்குமா என்பது நோக்கியா வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

நோக்கியா 3310 ரீபூட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ.4000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை என மூன்று நிறங்களில் இந்த போன் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இது குறைந்த அளவிலேயே கிடைக்கும் என்றும், இந்திய சந்தைகளில் வரும் மே மாதம் இது வெளிவரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close