[X] Close

ஜி.எஸ்.டி,யால் காலண்டர் உற்பத்தி தொழில் பாதிப்பு

2018-Calendar-Making-Work-affected-by-GST

2018ஆம் ஆண்டிற்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணி சிவகாசியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.‌‌ 


Advertisement

த‌‌மிழகத்தின் குட்டி‌ ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, பட்டாசுக்கு மட்டுமல்ல காலண்டர்கள் உற்பத்திக்கும்‌ பிரசித்தி பெற்றது. இங்குள்ள 1100-க்கும் மேற்பட்ட அச்சகங்களில், தமிழ் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் காலண்டர்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

ஆனால், காலண்டர் உற்பத்தி தொழிலுக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளதால்,‌ தங்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக காலண்டர் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் பல்வேறு இன்னல்களை கடந்து தொழில் செய்து வரும் சூழலில், காகித பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பது தங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக‌வும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான சலுகையை செய்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close