தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்த‌ இருவர் கைது

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்த‌ இருவர் கைது
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்த‌ இருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தடை செய்யப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் வைத்திருந்த‌ இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மீஞ்சூரில் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து மீஞ்சூர் காவல்துறையினர் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்ட போது அதில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து லாரியுடன் அதனை பறிமுதல் செய்து காவல்துறையினர் இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற மளிகை கடை உரிமையாளரையும் வேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் லோகநாதன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கொண்டு வந்து பதுக்கி வைத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அவர்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com