Published : 25,Feb 2017 02:35 AM
முதலமைச்சராக ஆன பின் முதன்முறையாக பிரதமரை சந்தித்த பழனிசாமி

பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.
கோவை ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்துப் பேசினார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, பிரதமருடன் பழனிசாமி சந்தித்து பேசியது இதுவே முதன்முறையாகும். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.