[X] Close

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: திஷாரா பெரேரா நம்பிக்கை

IND-vs-SL-First-T20-Cricket

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.


Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கட்டக் நகரில் இரவு 7:00 மணியளவில் போட்டி தொடங்குகிறது.

இலங்கை வீரர்கள் நேர்மறையான சிந்தனையுடன் டி20 தொடரை எதிர்கொள்வார்கள் என அந்த அணிக் கேப்டன் திஷாரா பெரேரா தெரிவித்துள்ளார். இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியதைப் போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் பெரேரா குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close