[X] Close

ஆர்.கே.நகரில் முடங்கிய போக்குவரத்து: எரிச்சலடைந்த மக்கள்

More-Traffic-in-RK-Nagar-for-By-Election

ஆர்.கே.நகரில் உள்ள வெளியூரை சேர்ந்தவர்கள் இன்றே வெளியேற வேண்டும் என்பதால் அங்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது.

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. பரப்புரைக்கு இறுதி நாள் என்பதால் அனைத்து வேட்பாளர்களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஆர்.கே.நகரில் முகாமிட்டு வாக்கு சேகரித்தனர். இதையடுத்து பரப்புரை ஓய்ந்ததால், தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி தொகுதி மக்கள் அல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேறினர்.

ஒரே நேரத்தில் பல்வேறு கட்சியினரும், தொண்டர்களும், வெளியேறியதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி முடித்து மாணவர்கள், பணி முடித்த தொழிலாளர்களும் வீடு திரும்பும் நேரம் என்பதால் ஆர்.கே.நகரின் அனைத்து பகுதிகளும் போக்குவரத்து நெரிசலில் தத்தளித்தன. வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவும் நேரிட்டது. இதனால் அந்த தொகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close