[X] Close

கோலியுடன் என்னை ஒப்பிடுவதா? : பாகிஸ்தான் பேட்ஸ்மேன்

Compare-me-with-Goli----Pakistan-batsman

உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியுடன் தன்னை ஒப்பிடாதீர்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். 


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி உலகம் முழுவதும் அறியப்பட்டு வரும் நட்சத்திர கிரிக்கெட் வீராக மாறி வருகிறார். சமீப
காலமாக விராட் கோலி பங்குப்பெற்று விளையாடும் அனைத்தும் போட்டியிலும், மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சிறந்த
ஆட்டத்தால் கோலிக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அத்துடன், களத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை கோலி வெளிப்படுவதுவதாக
அவர் மீது சர்ச்சைகளுக்கும் எழுந்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், மிக குறுகிய நாட்களுக்குள் அதிக புகழை அடைந்திருக்கும் பாகிஸ்தான்
கிரிக்கெட் வீரர் பாபர் அசாம், அந் நாட்டின் விராட் கோலி என்று புகழாரம் சூட்டி இருந்தார். இந்நிலையில் தற்போது ESPN இணையதளம் ஒன்றிற்கு
பேட்டியளித்த  பாபர் அசாம், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனான விராட் கோலியுடன் தன்னை ஒப்பிட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும்,
விராட் கோலித்தான் உலகிலேயே தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்றும் பாராட்டியுள்ளார். கோலி அளவிற்கு தான் இன்னும் எந்த சாதனைகளையும்
செய்யவில்லை என்றும், தான் தொடர்ந்து மிகச் சிறந்த முறையில் தனது நாட்டின் அணிக்காக விளையாட உள்ளதாகவும் பாபர் அசாம்
தெரிவித்துள்ளார். அதேபோல் தன்னுடைய சிறுவயதில் இருந்தே, கிரிக்கெட் ஜாம்பவான்  ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டத்தைக் கண்டு ரசித்ததாகவும்  
பாபர் அசாம் பேட்டியில் கூறியுள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close