[X] Close

எந்த கப்பலும் வரவில்லை: கடலில் இருந்து மீட்கப்பட்ட மீனவர்கள் வேதனை

No-ship-arrived--the-fishermen-recovered-from-the-sea-are-suffering

ஓகி புயலில் சிக்கி கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.


Advertisement

ஓகி புயல் காரணமாக, மீன்பிடிக்க சென்ற ஏராளமான கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் கன்னியாகுமரி மீனவ கிராமங்கள் சோகத்தில் உள்ளன. இந்நிலையில் வள்ளவிளையிலிருந்து காணாமல் போன மீனவர்களை தேடிச்சென்றவர்கள், கோவா அருகே கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 10 பேரை மீட்டுள்ளனர். ஓகி புயலில் சிக்கி படகு பழுதானதால் மீனவர்கள் கடலில் உதவிக்காக காத்திருந்துள்ளனர். மீட்கப்பட்ட 10 மீனவர்களும் கொச்சி துறைமுகத்திற்கு அழைத்து வரப்‌பட்டனர். 

இதுகுறித்து மீட்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், நவம்பர் 23ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றோம். ஓகி புயலில் சிக்கி படகு பழுதடைந்தது. வேறு வழியின்றி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தோம். 2வாரங்களுக்கு மேலாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த எங்களை மீட்க, எந்த மீட்புக்கப்பலும் வரவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close