Published : 19,Dec 2017 02:45 AM

வேன்- லாரி நேருக்கு நேர் மோதல்: 4 பேர் பலி

Van-and-Larry-crash-in-Tirupur

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கார்த்தி மற்றும் மாணிக்கராஜ் ஆகிய இருவரும் மாருதி வேனில் நண்பர்களுடன் கோவை சென்றுவிட்டு நேற்று நள்ளிரவு திருப்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குப்புசாமிநாயுடு புரம் அருகே வேன் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே கேரளா நோக்கி சென்ற கண்டெய்ன‌ர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. அதில் வேனில் பயணித்த சகோதரர்கள் இருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். படுகாய‌மடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்