Published : 18,Dec 2017 01:08 PM

பிறந்து 12 நாட்களே ஆன பெண்குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை

The-baby-girl-who-was-born-in-the-12-days-was-thrown-into-the-water-tank

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பிறந்து 12 நாட்களே ஆன பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பூபதி - தனலட்சுமி தம்பதிக்கு 2வாரங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இரவு தூங்கி கொண்டிருந்த போது குழந்தையை காணவில்லை என பூபதியும், தனலட்சுமியும் காலை வரை தேடியுள்ளனர். அக்கம்பக்கத்து வீட்டாரும் குழந்தையை தூக்கிச்செல்லவில்லை என கூறியதால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், அதே பகுதியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான தரைநிலை குடிநீர் தொட்டியில் குழந்தையின் உடல் மிதந்துள்ளது. 

அவர் அளித்த தகவலின் பேரில் குழந்தையின் உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தை என்பதால், பெற்றோரே தண்ணீர் தொட்டியில் வீசிக்கொன்றனரா அல்லது வேறு யாரேனும் குழந்தையை தூக்கிச்சென்று தண்ணீர் தொட்டியில் வீசினார்களா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்