[X] Close

சாதி, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி: தேர்தல் முடிவுகள் குறித்து ஹெச்.ராஜா

End-of-caste-and-successive-politics--H--Raja-on-election-results

சாதி மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருமாநிலத் தேர்தல் முடிவுகள் ‌அமைந்துள்ளதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலில் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக வெற்றியை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குஜராத் மற்றும் இ‌மாச்சலப் பிரதேசத்தில் கிடைத்த வெற்றியால் 2019 பொதுத்தேர்தல் எந்த‌ திசையை நோக்கி செல்கிறது என்பதில் மக்களிடம் தெளிவு பிறக்கிறது எனக் கூறினார். மேலும், இந்த தேர்தலின் வெற்றி ஜாதி மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் பலர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தேர்தல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close