Published : 18,Dec 2017 04:19 AM
இமாச்சலில் பாஜக முன்னிலை: முதல்வர் வேட்பாளர் பின்னடைவு

இமாச்சலப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலையில் தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சியே வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில் குஜராத்தில் காங்கிரஸும் பாஜகவு மாறி மாறி முன்னிலையில் உள்ளது.
இதே போல 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குப்பதிவு தொடங்கின. இங்கு பாஜக 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 20 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.
சஞ்சன்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம்குமார் துமல் 540 வாக்குகள் வித்தியாசத்தின் பின் தங்கியுள்ளார்.
இரண்டு தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.