[X] Close

3 முறை மோடி வெற்றி பெற்ற மணிநகர் தொகுதியில் பாஜக முன்னிலை

bjp-leading-in-maninagar-constituency

நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்னதாக குஜராத்தில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிநகர் தொகுதியில் பாரதிய ஜனதா முன்னிலை பெற்று வருகிறது.

182 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி தொடங்கியது. முன்னணி நிலவரங்கள் நொடிக்கு நொடி மாறி வருகின்றன. சரியாக 9 மணி நிலவரப்படி குஜராத்தில் 84 தொகுதிகளில் பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்னதாக குஜராத்தின் மணிநகர் தொகுதியில்தான் போட்டியிட்டு குஜராத்தின் முதலமைச்சராக தேர்வாகியிருந்தார். 2002, 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட மோடி தொடர் வெற்றி பெற்று அசத்தினார். எனவே மணிநகர் தொகுதி மோடியின் செல்லத் தொகுதியாக கருதப்பட்டது. 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதால், தனது மணிநகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றார். அதனையடுத்து அத்தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் பட்டேல் வெற்றி பெற்றார். தற்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக சார்பில் சுரேஷ் பட்டேல்தான் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது அவர் முன்னிலை பெற்று வருகிறார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close