ஆஸ்திரேலியாவின் சாதனைகளை தகர்க்கும் இந்திய அணி

ஆஸ்திரேலியாவின் சாதனைகளை தகர்க்கும் இந்திய அணி
ஆஸ்திரேலியாவின் சாதனைகளை தகர்க்கும் இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெற்றிகளை பெறும் போதெல்லாம் ஏதாவது ஒரு ஆஸ்திரேலியாவின் சாதனைகளை சமன் செய்து வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்துள்ளது. அதேபோல், விராட் கோலி கேப்டனாக செய்யும் சாதனைகள், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனைகளை சமன் செய்தோ அல்லது தகர்த்தோ வருகிறது.

இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இன்று வென்றுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக 8 ஒருநாள் தொடர்களை வென்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது. தொடர்ச்சியாக 15 தொடர்களை வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் இடத்தில் இருந்து வருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் - 15 (1980-88)
ஆஸ்திரேலியா    - 8 (2009-2010)
இந்தியா*         - 8 (2016-17)
பாகிஸ்தான்      - 7 (2011-12)
தென் ஆப்பிரிக்கா - 7 (2015-17)

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதன்முதலாக தொடரை வென்றுள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா செல்கிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடரை வெல்லும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவின் சாதனைகளை தகர்த்து இந்திய அணி சாதனை படைக்கும். இந்திய அணி 2017-ம் ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த தொடரையும் இழக்காமல் விளையாடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து சிற்பக் கலைஞர் சுதர்சன பட்நாயக் கடற்கடை மணலில் பேட் மற்றும் பந்தினை சிற்பமாக செய்து இருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com