[X] Close

ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 15 பேர் கைது

15-arrested-related-to-rk-nagar-byelection--Election-Commission

ஆர்.கே.நகரில் தேர்தல் தொடர்பான பல்வேறு புகார்களில் கடந்த 11ஆம் தேதி முதல் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவித்தப்படி டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுமா..? நடைபெறாதா..? என்ற சந்தேகம் சாமானிய மக்களுக்கு வந்துவிட்டது. ஏனென்றால் அந்த அளவுக்கு பணப்பட்டுவாடா புகார்களும், பண பறிமுதல் நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால்தான் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று தான் இந்த முறையும் ஏகப்பட்ட பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. தேர்தல் ஆணையமும் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் பணப்பட்டுவாடா புகாரில் ரேவதி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.53,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் தேர்தல் தொடர்பான பல்வேறு புகார்களில் கடந்த 11 ஆம் தேதி முதல் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகரில் அனுமதியின்றி பரப்புரைக்கு பயன்படுத்தப்பட்ட 83 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதுதவிர ஆர்.கே.நகரில் இதுவரை 30 லட்சத்து 29,100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close