Published : 24,Feb 2017 10:19 AM

டி.டி.வி.தினகரன் அழைப்பு: ஓ.பன்னீர் செல்வம் வியப்பு

Former-TN-CM-O-Pannerselam-reply-for-TTV-Dinakaran

அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியில் சேர அழைப்பது வியப்பளிக்கிறது என டிடிவி தினகரன் விடுத்த அழைப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் உட்கார யாருக்கும் தகுதியில்லை எனவும், வாக்களித்து பொதுச்செயலாளர் வரும் வரை ஜெயலலிதாதான் பொதுச்செயலாளர் என்றும் கூறினார்.

121 எம்எல்ஏக்களை தவிர மக்கள் அனைவரும் தங்கள் பக்கம் உள்ளதாகவும் தொண்டர்களின் எண்ணப்படி தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் பன்னீர் செல்வம் கூறினார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியில் சேர அழைப்பது வியப்பளிக்கிறது என டிடிவி தினகரன் விடுத்த அழைப்பிற்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக விரோதம் என கருத்து தெரிவித்த அவர், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடப்போவதாகவும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்