ஒகி புயல் பாதிப்பு: மத்திய அரசிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

ஒகி புயல் பாதிப்பு: மத்திய அரசிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

ஒகி புயல் பாதிப்பு: மத்திய அரசிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை தமிழக அரசு இன்று மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது.

வங்கக்கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஏகப்பட்ட மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஒகி புயல் நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. மீனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஒகி புயல் பாதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவை கடந்த 4-ஆம் தேதி அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரித்துள்ளனர். ஒகி புயலால் குமரி மாவட்ட மாவட்ட மீனவர்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த
அறிக்கையை தமிழக அரசு இன்று மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது. அறிக்கையில் புயல் நிவாரணத்திற்கு தேவையான நிதியையும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com