Published : 16,Dec 2017 12:17 PM

தனிநபர் தாக்குதல்களே ராகுலை வலிமையானவராக்கின: சோனியா காந்தி பேச்சு

Country-facing----unprecedented-challenges----since-2014--but-we-are-not-going-to-get-scared--says-Sonia-Gandhi

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொருப்பேற்றிருப்பது, பெரிய பாரம்பரிய கட்சியான காங்கிரஸுக்கு இது ஒரு புதிய சகாப்தம் என்று சோனியா காந்தி கூறினார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, இந்திரா காந்தி என்னை மகளாக ஏற்றுக் கொண்டார், அவரிடமிருந்து நம் நாட்டின் கலாச்சாரம், நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பற்றி கற்றுக்கொண்டேன். 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். நான் எனது தாயை இழந்தேன். அவர் மரணம் என் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அதன் பிறகு ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார். ஆதரவற்ற நிலையில், அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வெகு நாட்கள் ஆனது. 2014 ஆம் ஆண்டு முதல் நாம் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் சவால் மிகப்பெரியது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. நமது கட்சி பல தேர்தல்களில் தோல்வியடைந்தன. ஆனால் நாம் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம். நம் நாட்டின் கட்டமைப்பும், பலதரப்பட்ட பண்பாட்டுக் கூறுகள் என அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. நாட்டில் ஒருவிதமான பயமான சூழல் நிலவுகிறது. 

ராகுல் காந்தி எனது மகன், அவரைப்பற்றி நானே பெருமையாகச் சொல்வது பொருத்தமாக இருக்காது. இருந்தும், அவர் சிறு வயதிலிருந்தே பல வன்முறை தாக்குதல்களை மன ரீதியாக எதிர்கொண்டுள்ளார். மேலும், அவர் அரசியலில் கால் பதித்ததிலிருந்து தனி நபர் தாக்குதல்களுக்கு ஆளாகி உள்ளது. இவையெல்லாம் ராகுலை ஒரு வலிமையானவராக மாற்றியுள்ளன. இந்தியா ஒரு இளம் நாடு, ஒரு இளம் தலைவரைக் கொண்ட கட்சி, நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை கொண்டுவரும் என்று நம்புகிறேன். புதிய பாதையில் பயணிக்க உள்ள ராகுலுக்கு வாழ்த்துகள். ராகுலின் சாதனைகளைக் கண்டு களிப்படைய நான் எப்போதும் அவருடன் இருப்பேன். ஒரு பாரம்பரிய கட்சிக்கு, இது ஒரு புதிய சகாப்தம் என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்