ராஜஸ்தானில் காதல் விவகாரத்தில் இளம்பெண்னை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் பனாய் சிங். இவர் தனது 17 வயது பெண்ணை உறவினர்களுடன் சேர்ந்து படுகொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் காதல் விவகாரத்தில் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பனாய் சிங்கின் மகளுக்கு அவருடன் வகுப்பில் பயிலும் சகமாணவனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பனாய் சிங் அவரை கண்டித்துள்ளார். அவரது பேச்சை அந்த பெண் கேட்காததால் ஆத்திரமடைந்த பனாய் சிங் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு சடலத்தை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த கொலையில் குடும்ப உறுப்பினர்களுக்கும் பங்கு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், பனாய் சிங் மகளும் அவரது வகுப்பு தோழனும் காதலித்து வந்துள்ளனர். இது பனாய் சிங்கிற்கு தெரிய வர தனது மகளை அவர் கண்டித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் சென்றுள்ளார்.தகவல் அறிந்த பனாய் சிங் தனது மகளை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. கொலை தொடர்பாக பெண்ணின் தந்தையான பனாய் சிங், அவளது மாமா உதய் சிங், அத்தை கீதா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் உறவினர்கள் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தார்.
Loading More post
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!