Published : 16,Dec 2017 08:20 AM
ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு: கேரள வியாபாரிகள் மகிழ்ச்சி

தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் கேரள வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சபரிமலை சென்று திரும்பும் வாகனங்கள் குமுளி வழியே தமிழகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந்த ஒரு வழிப்பாதை திட்டத்தால், குமுளி, தேக்கடியில் சபரிமலை சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள ’சிப்ஸ்’, கேரள அல்வா மற்றும் ஏலக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக இருப்பதால் கேரள வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.