[X] Close

நிர்பயா சம்பவம் 5 ஆண்டுகள் நிறைவு: குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது?

Five-Years-Ends--When-Will-the-Culprits-Hang-

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 


Advertisement

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி, மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து முடிந்து 13 ஆவது நாள் சிகிச்சை பலனின்றி நிர்பயா உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் நடந்து முடிந்து இன்றுடன் 5 ஆண்டு நிறைவடைகிறது. ஆனால் இதில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் 4 பேர் தற்போது உயிருடன் வாழ்ந்து வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் முகேஷ், பவன் குப்தா, வினாய் ஷர்மா, அக்ஷய் குமார், ராம்சிங் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங், திகார் ஜெயில் தற்கொலை செய்துக்கொண்டர். மீதமுள்ள நால்வரின் தூக்கு தண்டனை, தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. வினாய் ஷர்மா மற்றும் பவன் ஆகிய இருவரின் தீர்ப்பை எதிர்த்து கடந்த 12 ஆம் தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தங்கள் மகளின் இழப்பை நினைத்து தினம் தினம் கவலைப்படும் நிர்பயாவின் பெற்றோர்கள், எங்கள் மகளை போன்று வேறு எந்த பெண்ணிற்கும் இதுப் போன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று தினம் தினம் வேண்டுவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு தற்போது வரை தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close