[X] Close

காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல்காந்தி

Congress-New-president-Rahul-gandhi

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.


Advertisement

காங்கிரஸ் கட்சியின் 87-ஆவது தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நேரு குடும்பத்தில் இருந்து வந்த 6-ஆவது காங்கிரஸ் தலைவர் என்ற பெருமையும் ராகுல்காந்திக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றதையடுத்து, ஏராளமான தொண்டர்கள் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த 19 ஆண்டுகளாக காங்கிரசின் தலைவராக இருந்த சோனியா காந்தி, உடல் நலக்குறைவாக இருப்பதால் கட்சியின் செயல்பாடுகளை ராகுல் காந்தியே கவனித்துவந்தார். இந்நிலையில், கடந்த 11-ம் தேதி ராகுல்காந்தி போட்டியின்றி கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல்காந்தி, தற்போது தலைவராகி கட்சியை வழிநடத்தவுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close