[X] Close

பி.வி.சிந்து ஹாட்ரிக் வெற்றி: அரையிறுதியில் சீன வீராங்கனையுடன் மோதல்

Dubai-Super-series-Badminton--PVSindhu-Hatrick-Victory

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி சிந்து அரையிறுதி போட்டியில் சினா வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சிந்து லீக் சுற்றுப்போட்டிகளில் 3ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். சிந்து தனது 3ஆவது ஆட்டத்தில் ஜப்பானின் யமாகுச்சி-யை எதிர்க்கொண்டார். இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-9, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார். இந்த வெற்றியின் மூலம் சிந்து  அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யுஃபே உடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார். ஆடவர் பிரிவில் இந்தியாவில் ஸ்ரீகாந்த் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறினார். 


Advertisement

Advertisement
[X] Close