[X] Close

வாக்குச்சீட்டு மூலம் தேர்தல்: கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்

Karnataka-CM-Siddaramaiah-Demands-Use-Of-Ballot-Papers-on-Electon

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். 

ராய்ச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபுணர்கள் சிலரிடம் பேசியதாகவும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என அவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் சுயாட்சி பெற்ற அமைப்பாக இருந்தாலும், தேர்தல் ஆணையர்களை மத்திய அரசுதான் நியமிப்பதாக சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தல் முடிவுகள் கர்நாடகா தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற அவர், பழைய தேர்தல் முறையான வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவதில் தவறில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close