[X] Close

மலிங்காவை ஓரங்கட்டிய இலங்கை கிரிக்கெட் அணி!

Malinga--rested--for-India-T20s

இந்திய அணியுடனான, டி 20 போட்டியில் மலிங்காவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.


Advertisement

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது. இதையடுத்து மூன்று டி20 போட்டிகளில் இலங்கை அணி விளையாடுகிறது. இதற்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மூத்த வேகப்பந்து வீச்சாளர் 34 வயதான மலிங்கா அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சேர்க்கபடவில்லை. ’அவர் நீக்கப்படவில்லை; அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்று இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயசேகரா கூறியுள்ளார். சுரங்கா லக்மல், திரிமன்னேவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 


Advertisement

Advertisement
[X] Close